F_MU1, இது ஏதோ ஒரு கணிதக் குறியீடு என யாரும் நினைத்துவிட வேண்டாம். இது கென்யாவில் வாழ்ந்த ஓர் அசாத்திய பெண் யானையின் பெயர். 60 வருடங்களாக சாவோ (Tsavo) சமவெளிகளில் சுற்றித் திரிந்த யானைகளின் ராணியான இது விஞ்சியிருக்கும் வெகு சில `சூப்பர் டஸ்கர்'-களில் ஒன்றாக இருந்தது.